செட்டிபுண்ணியம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

செட்டிபுண்ணியம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
செட்டிபுண்ணியம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
Published on

கல்லூரி மாணவி

செங்கல்பட்டு மாவட்டம் செட்டி புண்ணியம் அடுத்த வடகால் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ஹரிணி (வயது 19). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 20-ந்தேதி அமலம்மாள் வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததால் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஹரிணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொக்கு மருந்தை சாப்பிட்டு வாந்தி எடுத்தார்.

தற்கொலை

இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பா மகன் கார்த்தி அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பந்தமாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com