கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Published on

சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மொட்டையன். இவரது மகள் காவியா (வயது19). இவர் சிறுகனூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். மேலும் அவர் ஆங்கிலத்தில் போதிய புலமை இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கல்லூரியில் அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் இருந்ததால் அவர் படிப்பதற்கு சிரமம் அடைந்து வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 11-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com