கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Published on

கோவை

கோவை பீளமேடு கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மகள் அபிராமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அபிராமிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் அபிராமிக்கு அறிவுரை கூறியதுடன், கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அபிராமி உடனடியாக திருமணம் செய்து வைக்கும் படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் படிப்பு முடியும் வரை திருமணம் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த அபிராமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com