

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் ராஜாநகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளியான இவரது மகள் காயத்திரி (வயது 18). இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். காயத்திரி சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காயத்திரி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காயத்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.