மினி பஸ் மோதி கல்லூரி மாணவன் சாவு

பள்ளிகொண்டா அருகே மினி பஸ் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
மினி பஸ் மோதி கல்லூரி மாணவன் சாவு
Published on

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கவுதம் (வயது 18), வேப்பங்கால் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கவுதம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு இன்று காலை மோட்டார்சைக்கிளில் பள்ளிகொண்டா நோக்கி சென்றார். அப்போது கும்லாங்குட்டை பகுதியில் எதிரே வந்த மினி பஸ் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த கவுதமை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக மினிபஸ் டிரைவர் ஜெகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com