பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.
பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
Published on

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடித்தெருவை சேர்ந்தவர் அசோக். இவருடைய மகன் அஜய் (வயது 19). இவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் கல்லூரிக்கு ஜீயபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்றார். அப்போது, அவர் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பஸ் முத்தரசநல்லூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக அஜய் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்ச பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com