திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு

மீஞ்சூர் அருகே திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் சாவு
Published on

கல்லூரி மாணவர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் வேலு (வயது 50). இவரது மகன் சதீஷ் (20). இவர் சென்னை கொருக்குப்போட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ.3-ம் ஆண்டு ஆண்டு படித்து வந்தார். பகுதி நேர வேலையாக கேட்டரிங் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்தார்.இநத நிலையில் கடந்த 23-ந்தேதி மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேட்டரிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

சாவு

அப்போது அங்கு அடுப்பில் பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த சூடான ரசத்தில் நிலை தடுமாறிய சதீஷ் தவறி விழுந்தார். இதனால் உடல் வெந்து படுகாயடைந்த சதீஷ் வலியில் அலறி துடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com