குளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு

குளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார்.
குளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
Published on

திருவரங்குளம் அருகே திருக்கட்டளை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சுந்தர் (வயது 19). புதுக்கோட்டை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று திருவரங்குளம் கோவில் தெப்ப உற்சவத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தெப்ப உற்சவத்தை பார்த்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சுந்தர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com