தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

வீட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக யமுனா மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி யமுனா உயிரிழந்தார்.
யமுனா
Published on

சென்னை,

சென்னை தாம்பரம் அருகே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மின்சாரம் தாக்கி மாணவி பலி

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (வயது 19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று (புதன் கிழமை) மாணவி யமுனா தனது வீட்டில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக வீட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட யமுனா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கஸ்பாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com