நண்பரின் பிறந்தநாளில் மது அருந்திவிட்டு அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் சாவு

நண்பரின் பிறந்தநாளில் மது அருந்திவிட்டு அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பரின் பிறந்தநாளில் மது அருந்திவிட்டு அசைவ உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் சாவு
Published on

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 21). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பரான ராம்குமார் என்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு, நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் மகாவிஷ்ணு, சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள துரித உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து தூங்கிய அவர், அதன்பிறகு எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகாவிஷ்ணுவை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மகாவிஷ்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாவிஷ்ணு சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com