

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யபாரதி, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து அசத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கே.ஏ. நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகள் நித்யபாரதி . நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர்ந்து 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து நித்யபாரதி அசத்தியுள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 11.29 மணி வரை நீரில் மிதந்து அசத்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் மேற்கொண்ட இந்த முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாணவியின் சாதனை முயற்சியை பாராட்டி பொதுமக்கள் மற்றும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.