கடலூரில் இடி தாக்கி கல்லூரி மாணவர் பலி; 2 பேர் பலத்த காயம்

கல்லூரி மாணவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இடி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
கடலூரில் இடி தாக்கி கல்லூரி மாணவர் பலி; 2 பேர் பலத்த காயம்
Published on

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மாசிமகம் நடைபெறும் இடம் அருகே, பெரியார் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் 3 இளைஞர்கள் நேற்று நின்று கொண்டிருந்தனர். அதில் ஹரிகரன் என்கிற மாணவர் ஒருவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இடி மின்னல் தாக்கியது.

இதில் ஹரிகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடியின் தீவிர தாக்குதலால் மற்ற 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடலூரில் இன்று காலை முதல் பலத்த இடி மின்னலுடன் சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com