கல்லூரி மாணவர் மாயம்

கல்லூரி மாணவர் மாயமானார்.
கல்லூரி மாணவர் மாயம்
Published on

முசிறி தாலுகா தா.பேட்டை அருகே டி.புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). இவரது மகன் முரளிதரன் (19). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் கல்லூரியில் இருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி சென்ற முரளிதரன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முருகேசன் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன மாணவர் முரளிதரனை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com