கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயமானார்.
கல்லூரி மாணவி மாயம்
Published on

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மகள் உமாபாரதி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 28-ந் தேதி காலை 11 மணி அளவில் வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது தந்தை செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com