கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது

மாணவியிடம் கர்ப்பத்தை கலைத்தால்தான் திருமணம் செய்வேன் என்று காதலன் மிரட்டியுள்ளார்.
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது
Published on: 

தென்காசி,

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெற்றிக்கருப்பன் மகன் சஞ்சய் (21 வயது). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக படித்தனர்.

மாணவி கர்ப்பம்

அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவர்கள் நெருக்கமாக இருந்ததில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து மாணவியிடம் கர்ப்பத்தை கலைத்தால்தான் திருமணம் செய்வேன் என்று கூறி சஞ்சய் மிரட்டியதாக கூறப்படுகிறது.

காதலன் கைது

இதுகுறித்த புகாரின்பேரில். ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் மற்றும் உடந்தையாக இருந்த அவருடைய அண்ணன் அரவிந்த் (25 வயது), சித்தப்பா சேர்மன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சஞ்சய், அரவிந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சேர்மனை வலைவீசி தேடி வருகின்றனர்.

X