கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
Published on

பேரூர்

திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கல்லூரி மாணவி

கோவையை அடுத்த சூலூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, பேரூர் அனைத்து மகளிர் பேலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். நான் கல்லூரி பஸ்சில் சென்று வந்தேன். அப்போது கும்பகோணத் தை சேர்ந்த கவுதம் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள் 2 பேரும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தோம்.

பாலியல் பலாத்காரம்

கவுதம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னை மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து ஜனவரி 2022-ம் ஆண்டு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்த கவுதம் மீண்டும் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.

இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் நான் கர்ப்பமானேன். இது குறித்து கவுதமிடம் கூறினேன். அவர் கர்ப்பமான விஷயத்தை யாரிடமும் செல்ல கூடாது என்று என்னை மிரட்டினார். மேலும் அவர், என்னிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

ஆசை வார்த்தை

இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி திடீரென எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே என்னை அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எனது தாயார் அழைத்து சென்றார். அங்கு பரிசோத னை செய்த டாக்டர்கள் நான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக எனது தாயிடம் தெரிவித்தனர்.

அதற்கு யார் காரணம் எனது தாயார் கேட்ட போது நான் நடந்த சம்பவங்களை கூறினேன். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய கவுதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அதன் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண் ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கவுதம் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com