கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது
Published on

செக்கானூரணி

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவருக்கு உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகிளா நீதிமன்றத்தில் மாணவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செக்கானூரணி போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேராசிரியைகள், மாணவிகள் பலர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை கடந்த 13-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் மாணவிகள், பேராசிரியைகள் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர்கள் ஞானசேகரன், ஸ்டாலின் மற்றும் மாணவன் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அதில் கல்லூரி மாணவன் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் பாலியல் புகாரளித்த மாணவி, இந்த வழக்கு தொடர்பாக அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் மிரட்டுவதாக கூறியதையடுத்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஒரு மாணவனையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த புதுவை பாரீஸ் நகரை சேர்ந்த பேராசிரியர் ஞானசேகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்டாலினை தேடிவருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com