கல்லூரி மாணவி தற்கொலை

படிப்புக்கு பணம் கட்ட முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை
Published on

போத்தனூர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது43). டிரைவர். இவருடைய மகள் நளினி (18). இவர் ஈச்சனாரி சிட்கோ பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கல்லூரி கட்டணம் செலுத்த பணம் கேட்டுள்ளார். அவர்கள் அடுத்த வாரம் பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மனவேதனை அடைந்த நளினி வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com