கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை
Published on

தா.பேட்டையை அடுத்த தேவானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் தொட்டியம் பகுதியில் தனியார் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவரது சகோதரி கீர்த்தனா கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மன வேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com