விழுப்புரத்தில்கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரத்தில்கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் மகள் சுமித்ரா (வயது 19). இவர் விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி சுமித்ரா, தனது வீட்டில் உள்ள இரும்புக்குழாயில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com