கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

பழவூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
Published on

வடக்கன்குளம்:

பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்தவர் கடம்பன். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அமுதவல்லி (வயது 17). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில நேற்று பெயிண்டிற்கு பயன்படுத்தும் டின்னரை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com