ஆசிரியை திட்டியதால் மன உளைச்சல்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவி செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆசிரியை திட்டியதால் மன உளைச்சல்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on: 

திருவள்ளூர்,

செங்குன்றம் அருகே ஆசிரியை திட்டியதால் மன உளைச்சலில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நர்சிங் மாணவி

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், என்.எஸ்.கே.கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். மெக்கானிக்கான இவரது மகள் ஜெஸ்வினி (17 வயது). இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும், வாலிபர் ஒருவருடன் ஜெஸ்வினிக்கு நட்பு ஏற்பட்டு இருவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஆசிரியை ஒருவர், ஜெஸ்வினியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த ஜெஸ்வினி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் உள்ள படுக்கை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X