‘சொல்வதை எழுதுபவர் பணிக்கு கல்லூரி மாணவர்களை நியமிக்கலாம்’ - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை

விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வலர்களாக, சொல்வதை எழுதுபவர் பணிக்கு மாணவர்களை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சொல்வதை எழுதுபவர் பணிக்கு கல்லூரி மாணவர்களை நியமிக்கலாம்’ - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை
Published on

சென்னை,

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் (Diploma in Elementary Education) / ஆசிரியர் கல்வி பட்டச் சான்று (B.Ed.,) / தொழிற் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களை, விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வலர்களாக, நடைபெறவிருக்கும் மார்ச்/ஏப்ரல் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு சொல்வதை எழுதுபவராக நியமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சொல்வதை எழுதுபவர் பணிக்கு கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com