தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று திறப்பு
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தன்மையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் தெரிவித்தன.

அதன்படி, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளன. இதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதன்படி, கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com