மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி
Published on

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்காபிள்ளை மகன் சத்தியசீலன். நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் தனது அக்கா மகள் அபிநயாவை(வயது 8) ஏற்றிக்கொண்டு பெத்தானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சென்றபோது, சத்தியசீலன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெத்தானூரை சேர்ந்த செல்வரங்கன் என்பவர் மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் சத்தியசீலன், செல்வரங்கம், அபிநயா 3 பேரும் காயமடைந்தனர் இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அபிநயா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com