மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

முக்கூடல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
Published on

முக்கூடல்:

முக்கூடல் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அரிசெல்வம் மகன் மகாராஜன் (18). முக்கூடல் ரஸ்தா பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மகன் பிரின்ஸ் (20). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரின்ஸ் ஓட்டினார். இதே போல் அவர்களின் நண்பர்கள் 2 பேரும் மற்றொரு சைக்கிளில் அவர்களுடன் சென்று கொண்டு இருந்தனர்.

முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் பொட்டல் காலனி பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்டு செல்லும் போது, பிரின்ஸ், மகாராஜன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், அவர்களது பின்னால் வந்த நண்பர்களின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மகாராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரின்ஸ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com