மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

திமிரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த காவனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 26). இவரது மனைவி ஜான்சிராணி. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை வேலை முடிந்ததும் ஊருக்கு பஸ்சில் வந்துள்ளார். அவரை பஸ்நிலையத்தில் இருந்து சரவணன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் 4 வயது மகன் குகனும் இருந்துள்ளான்.

கண்ணமங்கலம் செல்லும் சாலையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் அவரது மனைவி ஜான்சி ராணி, மகன் குகன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்து ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. ஜான்சிராணி மற்றும் குகன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com