மாமல்லபுரம் விடுதிக்கு வர வேண்டும்: தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அழைப்பு

வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் விடுதிக்கு வருமாறு விஜய் அழைத்துள்ளார்.
மாமல்லபுரம் விடுதிக்கு வர வேண்டும்: தேர்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அழைப்பு
Published on

தமிழக சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 108 இடங்களில் முன்னிலை மற்றூம் வெற்றி வக்கிறது. , திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 4 முனைப் போட்டி என்று சொல்லப்பட்ட நிலையில், நாதக களத்தில் மட்டுமே இருந்தது ஆனால், ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், ஆட்சி அமைக்க ஆயத்தமாகி வருகிறார். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் அனைவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் விடுதிக்கு வருமாறு விஜய் அழைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com