'கொளத்தூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் எனக்கு திகட்டாது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
'கொளத்தூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும் எனக்கு திகட்டாது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

"கொளத்தூர் தொகுதிக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை தொடர்ச்சியாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் தொகுதி கொளத்தூர் தொகுதி தான். அப்படிப்பட்ட இந்த தொகுதிக்கு நான் எத்தனை முறை வந்தாலும் எனக்கு திகட்டாது.

மேலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் போது அந்த மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. நான் அமைச்சர் சேகர் பாபுவை செயல் பாபு என்று அழைப்பதுண்டு. அவர் இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அப்படி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்." இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com