ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் கனிமொழி எம்.பி. பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்ற வைர விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.
ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் கனிமொழி எம்.பி. பேட்டி
Published on

ஆலந்தூர்,

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி., சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்ற வைர விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். சோனியா காந்திக்கு உடல் நலம் சரி இல்லாததால் ராகுல்காந்தி வருவதாக சொல்லப்படுகிறது.

விழாவுக்கு யார், யார் வருகிறார்கள்? என்ற விவரங்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஜனாதிபதி பார்க்க வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து உள்ளார்களே? என கேட்டனர். அதற்கு கனிமொழி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com