ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு
Published on

சென்னை,

சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் ரத்தம் அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் தொடர்ந்து அளித்து வரும் நிலையில் இன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர பிரச்சனையினால் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு டயாலிஸ் சிகிச்சை நடைபெற்று வருகிறது. நேற்று திடீரென்று சிறுநீரக பாதிப்பு அதிகமானதால் ராஜீவ்காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com