பிரதமருக்கு எதிராக கருத்து... காமெடி நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்

மதுரையில் சின்னத்திரை நகைச்சுவை நடிகரின் கால்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவி மற்றும் பாஜகவினர் நான்கு பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமருக்கு எதிராக கருத்து... காமெடி நடிகரின் காலை உடைத்த பாஜகவினர்
Published on

மதுரை,

மதுரையில் சின்னத்திரை நகைச்சுவை நடிகரின் கால்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவி மற்றும் பாஜகவினர் நான்கு பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ், அண்மையில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக, பாஜகவினர் அவரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனிடையே வெங்கடேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில், அவருக்கும் அவரது மனைவி பானுமதிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. இதனையடுத்து பானுமதி பாஜகவிலுள்ள உறவினராக வைரமுத்து என்பவரிடம், இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளப்பதிவு விவகாரத்தில் வெங்கடேஷ் மீது ஆத்திரத்தில் இருந்த வைரமுத்து, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஷின் கால்களை உடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வெங்கடேஷ் மனைவி பானுமதி, அவரது கார் ஓட்டுனர் மோகன் மற்றும் வைரமுத்து உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர். மேலும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com