

சென்னை,
மாதத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏறக்குறைய ரூ.1,000 (ரூ.993) ஏறியிருக்கிறது. தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி தனது உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறார். இனி டீ,காபி முதல் அனைத்தும் விலை ஏறும். இந்த விலை உயர்வும் மக்கள் தலையில் தான் விடியும்.
இந்திய வரலாற்றில் ஆங்கில ஆட்சியை விடவும் அதிகம் கொள்ளை அடிக்கிற ஆட்சி பாஜக ஆட்சிதான். உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் இதற்கு மேல் விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.