வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து ரூ. 1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com