வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

கியாஸ் சிலிண்டர்களின் விலைகள் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படுகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
Published on

சென்னை,

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 1,899.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

14.2 கிலோ எடை கொண்ட சமையில் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.868.50 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com