வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: சென்னையில் 215 ஓட்டல்கள் மூடல்

பெரும்பாலான ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளனர்.
வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: சென்னையில் 215 ஓட்டல்கள் மூடல்
Published on

சென்னை,

ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளில் தொடரும் போர், இந்தியாவுக்கான கியாஸ் வினியோகத்தினை வெகுவாகச் சீர்குலைத்துள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, தொழில் துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை நிறுத்தியுள்ளது.

ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறிய உணவகங்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளுக்கு சமையல் கியாசையே நம்பியுள்ள நிலையில், கியாஸ் வினியோகத்தின் திடீர் நிறுத்தம் ஓட்டல் துறைக்கு ஒரு நெருக்க டியை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், சென்னையில் 215 சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெரிய அளவிலான உணவகங்கள் விறகு, மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன. கியாஸ் வருகையைப் பொறுத்து அவ்வப்போது ஓட்டல்களை திறப்பதும், உணவு வகைகளைக் கணிசமாகக் குறைத்தும் விற்பனையை மேற்கொள்கின்றனர்.

அதேபோன்று சில ஓட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்று சேவை இல்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. அதே போன்று. பெரும்பாலான ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளனர். அதேபோன்று சிறிய ரக டீக்கடைகளில் கூட சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com