வணிக நிறுவனங்களில் சர்க்கரை இருப்பு 1,000 குவிண்டாலுக்கு அதிகமாக வைக்கக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு

வணிக நிறுவனங்களில் சர்க்கரை இருப்பு 1,000 குவிண்டாலுக்கு அதிகமாக வைக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வணிக நிறுவனங்களில் சர்க்கரை இருப்பு 1,000 குவிண்டாலுக்கு அதிகமாக வைக்கக்கூடாது: தமிழக அரசு அறிவிப்பு
Published on: 

சென்னை,

நாடு முழுவதும் சர்க்கரை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு மற்றும் கால அளவைக் குறைத்து மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையானது அரசிதழில் மறுபதிப்பு செய்துள்ளது.

அதன்படி, சர்க்கரை வியாபாரிகள் தாங்கள் வாங்கும் சர்க்கரை இருப்பை அதிகபட்சம் 15 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த கால அளவு 30 நாட்களாக இருந்தது. அதேபோல், எந்தவொரு இடத்திலும் வியாபாரிகள் வைத்திருக்கக்கூடிய சர்க்கரை இருப்பின் அளவு 1,000 குவிண்டாலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வரம்பு 2,000 குவிண்டாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை வினியோகத்தை முறைப்படுத்தவும், பதுக்கலைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X