வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்

இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள், உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவு என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள் மற்றும் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவாகும். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது.

விலையேற்றங்களின் மூலம் தோல்விகளை மறைக்கும் மத்திய அரசின் அலட்சியப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காகவும், விலையேற்ற அரசியலுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி உறுதியான அரசியல் போராட்டத்தை என்றென்றும் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com