டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் - நாளை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு

வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் - நாளை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்மழையால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் குழு நாளை சமர்ப்பிக்கிறது.

இது தொடர்பாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட விவரங்கள் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com