ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு குழு அமைப்பு - முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு குழு அமைப்பு - முதல்-அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசிகள், வயதுமுதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணை நோய்கள் உள்ள உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற சிறைவாசிகள், மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்டவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரையை வழங்க ஏதுவாக ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் மனநல மருத்துவக்கல்வி இயக்குனர், சிறைத்துறை தலைமை நன்னடத்தை அலுவலர், உலவியலாளர், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர் என 5 உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் துணைத்தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினராகவும் அங்கம் வகிப்பார்கள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com