மே 13-ந்தேதி முதல் இளநிலை கியூட் தேர்வு : அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

மே 13-ம் தேதி முதல் 16 வரை நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான இளநிலை க்யூட் (CUET UG 2025) தேர்வு தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு மே 13-ம் தேதி முதல் ஜூன் 3- வரை நடத்தப்பட உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதலினால் தேர்வு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 13-ம் தேதி முதல் 16 வரை நடக்கவிருக்கும் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு வெளியாகி உள்ளது.

இளநிலை கியூட் தேர்வு 2025 அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வர்கள் https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

படி 1 : https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2 : அதில் முகப்பு பக்கத்தில் Admit Card என்று இடம்பெற்று இருக்கும்.

படி 3 : அதனை கிளிக் செய்யவும். அதில் விண்ணப்ப எண், பாஸ்வார்டு, CAPTCHA ஆகியவை உள்ளிட்டு அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com