காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு: 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ்

காங்கிரஸ் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு: 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ்
Published on: 

சென்னை,

காங்கிரஸ் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 7 நாட்களில் விளக்கம் அளிக்க ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து, காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

சான்றிதழ் வழங்கும் விழா

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், SSA-2 இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஒன்றிய, நகரத் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கடந்த 22.11.2026 அன்று மாதவரம் எம்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புகார் கடிதம்

இந்த கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கூட்டத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி காங்கிரஸ் கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவிற்கு புகார் கடிதம் வந்துள்ளது.

விளக்கம் அளிக்க உத்தரவு

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஜி. வேல்முருகன் (முன்னாள் வட்டாரத் தலைவர், சோழவரம் மேற்கு), வி.ஆர். மணிகண்டன் (முன்னாள் வட்டாரத் தலைவர், சோழவரம் தெற்கு), கே. பிரபாகரன் (முன்னாள் வட்டாரத் தலைவர், வில்லிவாக்கம்), ஜே. ஜோஷி பிரேம் ஆனந்த் (முன்னாள் வட்டாரத் தலைவர், திருவள்ளூர் தெற்கு), என். வில்சன் (முன்னாள் வட்டாரத் தலைவர், புழல்), ஜி. ஜெயச்சந்திரன் (முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர்), வி.எஸ். தமிழரசன் (முன்னாள் வட்டத் தலைவர்), எஸ். இளங்கோ (முன்னாள் வட்டத் தலைவர்) ஆகியோர் கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைவர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சத்தியமூர்த்தி பவன், 40, திரு.வி.க. சாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கு நேரில் அல்லது எழுத்துப்பூர்வமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X