

மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழா சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள் நிலையில், பனையூர் அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகளையும் வீழ்த்தி த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். இதன்படி 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அவர் அறி விப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சி களும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக கூட் டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் விஜய் இடம் அளித்து இருப்பது அவரது செயல்பாடுகள் மீது எதிர்ப்பார்ப்பை அதிகரித் துள்ளது. முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் செல்வாக்கை பெற்று இருப்பது மற்ற அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதை தொடர்ந்து மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி த.வெ.க.வில் அணி அணி யாக இணைந்து வருகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜி னாமா செய்துவிட்டு த.வெ.க. வில் இணைந்துள்ள நிலையில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து சேர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று 2500 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவல கத்தில் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் முக்கிய பிரமுகர்கள் இன்று த.வெ.க.வில் சேர்ந்தார்கள். இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட் ரமணன் ஆகியோரும் கலந்து கொண்ட னர்.இந்த இணைப்பு விழா வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையே, இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியின் போது திடீரெனமின் வெட்டு ஏற்பட்டது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள் நிலையில், பனையூர் அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.