கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் 2 இடங்களில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரத்தில் திருவையாறு-கும்பகோணம் பிரிவு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலாளர் புனிதா தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதிகளில், மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். பொதுக்கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல, வெண்ணாற்றங்கரை பாலம் அருகே பம்பிங் ஸ்டேஷன் மற்றும் காமாட்சி தோட்டம் கிளை சார்பில், கிளை செயலாளர் ஜெனிபர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பம்பிங் ஸ்டேஷன் சாலையை சீரமைத்து தர வேண்டும். கூடுதலான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். காமாட்சி அம்மன் தோட்டப்பகுதியில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com