கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சை ஆற்றுப்பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் நிர்வாகிகள் குருசாமி, கரிகாலன், அப்துல்நசீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். ரேசன் கடையை அருகில் இடமாற்றம் செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் மாற்ற செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com