கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கழுமங்குடா, மீனவர் காலனி, காரங்குடா, மரக்காவலசை, சம்பைப்பட்டினம் ஆகிய கிளைகள் சார்பில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கழுமங்குடா கிளைச் செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வீரப்பெருமாள் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், வக்கீல் கருப்பையா, மீனவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கர்த்தர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மீன்பிடி துறைமுகங்களில் ஆற்று முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, படகு நிறுத்த வசதி செய்து தர வேண்டும். எரியாத தெருவிளக்குகளை மாற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்த வேண்டும். சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமனைப் பட்டா இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com