குடியரசு தின நிகழ்வுக்கான கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

மலிவாக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில், அவரது அழைப்பை நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தின நிகழ்வுக்கான கவர்னர் ஆர்.என்.ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாளை மறுநாள் (26.01.2024) நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். கவர்னர் மாளிகை அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், அதேசமயம் நாட்டின் விடுதலை போராட்ட வரலாற்றை புரட்டி பேசுவதும், அறிஞர் உலகம் ஒரு ஆயிரம் ஆண்டில் மனித சமூகம் கண்டறிந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்று ஏற்றுக் கொண்ட நிலையில் அவரை சிறுமைப்படுத்தி பேசுவதும், நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் தலைமை சாரதியாக திகழ்ந்து, தேசத் தந்தை என ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாத்மா காந்தி குறித்து அவதூறு பரப்புவதுமான மலிவாக செயல்படும் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில், அவரது அழைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.

கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் வழக்கம் போல குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com