மணிப்பூர் கலவரத்தை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவர சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பொருளாளர் இன்பஒளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சகாபுதீன், நாராயணன், ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், ஜெயமலர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com