பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூடுதலாக வெல்லம் வழங்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
x

கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (பச்சரிசி, சர்க்கரை, கரும்பு) தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதையொட்டி பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டுமெனவும், கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன

எனவே, இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கிலோ வெல்லம் வழங்கிடவும், அதேபோல கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story