தொகுதிகளை இறுதிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா அறிவாலயம் வருகை

திமுக கூட்டணியில் சென்னையிலும் ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டு வருகிறது.
தொகுதிகளை இறுதிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா அறிவாலயம் வருகை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின் 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை மற்றும் கீழ்வேளூர் ஆகிய இரு தொகுதிகளையும் கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு அல்லது கிள்ளியூர் தொகுதியை திமுக கூட்டணியில் விட்டு தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு வருகிறது. இந்த இரண்டு தொகுதியிலும் கடந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் இந்த இரண்டு தொகுதிகளையும் விட்டு கொடுக்க முன்வரவில்லை. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.

இது போலவே சென்னையிலும் ஒரு தொகுதியை கேட்டு வருகிறது. பல்லாவரம், வில்லிவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் கடந்த சட்ட சபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தது. இது மட்டுமல்லாமல் திருப்பூர் தெற்கு, சிங்காநல்லூர் இந்த 2 தொகுதிகளிலும் ஒரு தொகுதியை கேட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com